Saturday, August 28, 2010

இறகை போலே அலைகிறேனே..

இறகை போலே அலைகிறேனே
உந்தன் பேச்சை கேட்கையிலே
குழந்தை போல தவழ்கிறேனே
உந்தன் பார்வை தீண்டயிலே
தொலையாமல் தொலைத்தேனே
உன் கைகள் என்னை தொட்டதும்
கரையாமல் கரைந்தேனே
உன் மூச்சு காற்று பட்டதும்
அநியாய காதல் வந்ததே
அடங்காதே ஆசை தந்ததே
எனக்குள்ளே எதோ மின்னல் போலே தொட்டு
சென்றதே
கண்ணோரம் காதல் வந்தால்
கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை
நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால்
எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவையில்லை
நீ மட்டும் போதும் போதும் -ஓ
கூட வந்து நீ நிற்பதும்
கூடு விட்டு நான் செல்வதும்
தொடர்ருதே தொடருதே நாடகம்..
பாதி மட்டுமே சொல்வதும்
மீதி நெஞ்சிலே என்பதும்
புரியுதே puriyuthe காரணம்..
நேரங்கள் தீருதே வேகங்கள்
கூடுதே
பூவே உன் கண்ணுக்குள்ளே பூமி
பந்து சுத்துதே..
கண்ணோரம் காதல் வந்தால்
கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை
நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால்
எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவையில்லை
நீ மட்டும் போதும் போதும் -ஒ..
ஹே, என்னானதோ ஏதானதோ
இல்லாமல் போச்சே தூக்கமும்
கண்ணே உன்னை காணமல் நானில்லை-
ஒ..
என்மீதிலே உன் வாசனை
எப்போதும் வீச பார்க்கிறேன்
அன்பே உன்னை சேராமல் வாழவில்லை -
ஒ..
நீ என்னை காண்பதே வானவில்
போன்றதே
தூரத்தில் உன்னை கண்டால் தூறல்
நெஞ்சில் சிந்துதே..
ஓஓஹோ…
ஓஒ …
கண்ணோரம் காதல் வந்தால்
கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை
நீ மட்டும் போதும் போதும்
என்னோடு கையில் சேரும்
வேறொன்றும் தேவையில்லை
நீ மட்டும் போதும் போதும் -
ஒ...

ஆருயிரே ஆருயிரே அன்பே

ஆருயிரே ஆருயிரே அன்பே

உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்

நீயில்லையே நான் இல்லையே

நீப்போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்

நீயே என் உயிரே எனக்குள் உன் உயிரே

கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்

என் உயிர் நீயே என (ஆருயிரே)

வருவேன் உன்னிடம் எங்கே நீ தொலைந்தாலும்

நெஞ்சில் உன் முகம்

காற்றினில் மாறுதே O… O…

சுவாசத்தில் சேருதோ

நீ சுவாசிக்கும்போதும் வெளிவரமாட்டேன்

உனக்குள் வசிப்பெனே

உன்னிலே என்னுயிரே உனக்கும் என்னுயிரே

உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன் என்னிலே உறைகிறேன் (ஆருயிரே )

கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம்

கண்ணீரில் முடிந்தால் தான் காதல் காவியம்

மேற்றினில் வாழ்வேனோ

உன் தோள்களில் சாய்வேனோ

உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து

காலங்கள் மறப்பேனோ

உன்னிலே என்னுயிரே நாமே ஓருயிரே

நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்

உயிரை துறக்கிறேனே ..

பூக்கள் பூக்கும் தருணம்...

Male: பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே , பார்ததாரும் இல்லையே

Female: உலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே

Male: நேற்றுவரை நேரம் போகவில்லையே, உனது அருகே நேரம் போதவில்லையே

Female: எதுவும் பேசவில்லையே , இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே…இது எதுவோ?

Male: இரவும் விடியவில்லையே , அது விடிந்தால் பகலும் முடியவில்லையே பூந்தளிரே!

Male: வார்த்தை தேவையில்லை, வாழும் காலம் வரை , பாவை பார்வை மொழி பேசுமே !

Female: நேற்று தேவையில்லை , நாளை தேவையில்லை , இன்று இந்த நொடி போதுமே !

Male: வேரின்றி விதைன்றி வின்தூவும் மழையென்றி இது என்ன இவன் தோட்டம் பூகுதுதே ?

Female: வாளின்றி போரின்றி வழிகின்ற யுத்தமின்றி இது என்ன இவனுக்குள் என்னை வெல்லுதே ?

Male: இதயம் முழுக்க இருக்கும் இந்த தாயகம் , எங்கு கொண்டு நிறுத்தும்

Female: இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம் , அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்

Male: முந்தளிரே……

Female:Oh where would I be without this joy inside of me?

It makes me want to come alive; it makes me want to fly into the sky!

Oh where would I be if I didn’t have you next to me?

Oh where would I be? Oh where, oh where?

Male: எந்த மேகம் இது ? எந்தன் வாசல் வந்து எங்கும் ஈர மழை தூவுதே !

Female: எந்த உறவு இது ? எதுவும் புரியவில்லை என்றபோதும் இது நீளுதே !

Male: யாரென்று அறியாமல் , பேர்கூட தெரியாமல் , இவளோடு ஒரு சொந்தம் உருவானாதே !

Female: ஏனென்று கேட்காமல் , தடுத்தாலும் நிற்காமல் இவன் போகும் வழியெங்கும் மனம் போகுதே !

Male: பாதை முடிந்த பிறகும் , இந்த உலகில் பயணம் முடிவதில்லையே

Female: காற்றில் பறந்தே பறவை மறைந்து பிறகே , இல்லை தொடங்கும் நடனம் முடிவதில்லையே !

Male/Female: இது எதுவோ !

Female: பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே பார்ததாரும் இல்லையே

Female: உலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே

Male: நேற்றுவரை நேரம் போக வில்லையே , உனது அருகே நேரம் போதவில்லையே

Female: எதுவும் பேசவில்லையே , இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே …என்ன புதுமை ?

Female/Male: இரவும் விடியவில்லையே , அது விடிந்தால் பகலும் முடியவில்லையே

Male: இது எதுவோ!!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP